சிறுவயது போட்டோ
தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே ஒரு விஷயம் டிரண்ட் ஆகி வருகிறது.
அது என்னவென்றால் பிரபலங்களில் சிறுவயது புகைப்படங்கள் தான். ஒருசிலரை கண்டுபிடித்துவிடலாம், ஆனால் பல பிரபலங்களின் போட்டோக்களை கண்டு பிடிக்கவே முடியாது.
அப்படி இப்போது ஒரு பிரபலத்தின் சிறுவயது போட்டோ சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது.
யார் இவர்
அப்படி சமூக வலைதளத்தில் இப்போது ஒரு பிரபலத்தின் போட்டோ வலம் வருகிறது.
இவர் நடிப்பில் கடந்த 2015 மற்றும் 2017ல் வெளியான திரைப்படங்கள் இந்திய அளவில் பிரபலம் ஆனது.
இந்த வருடத்தில் ரிலீஸான படங்களை பற்றிய யோசனை வந்ததுமே இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் என்று தெரிந்திருக்கும்.
அவர் வேறுயாரும் இல்லை, நடிகர் பிரபாஸ் தான். பாகுபலி படம் பெரிய அளவில் வெற்றி கொடுக்க அதன்பின் சாஹோ நடித்தார், ஆனால் பெரிய வரவேற்பு பெறவில்லை.
இதனை தொடர்ந்து ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் போன்ற படங்களும் வெளியாகி சுமாராக ஓடியது. கடைசியாக பிரபாஸ் நடிப்பில் கல்கி 2898 ஏடி திரைப்படம் வெளியாக தெறிமாஸ் வசூல் வேட்டை நடத்தியது.