Monday, April 21, 2025
Homeஇலங்கை‘Rising Bharat’ உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள நாமல் புதுடில்லி பயணம்

‘Rising Bharat’ உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள நாமல் புதுடில்லி பயணம்


இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ‘Rising Bharat உச்சி மாநாடு 2025’ இல் கலந்துகொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ புதுடில்லி சென்றுள்ளார்.

செல்வாக்கு மிக்க தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்களை ஒன்றிணைக்கும் இந்த உச்சிமாநாடு, முக்கிய பிராந்திய பிரச்சினைகள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புகளில் கவனம் செலுத்துகிறது.

‘உரையாடல், ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட முன்னேற்றம் மூலம் இந்திய-இலங்கை உறவுகளை வலுப்படுத்துதல்’ என்ற தலைப்பில் நாமல் ராஜபக்ச உரை நிகழ்த்தியுள்ளார்.  பிராந்தியத்தில் பரஸ்பர வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே ஆழமான ஒத்துழைப்பை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை அவரது கருத்துக்கள் எடுத்துக்காட்டின.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இன்று இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர ஈடுபாட்டிற்கான எதிர்கால வழிகளைப் பற்றி விவாதிப்பதற்கான ஒரு முக்கியமான தளம் இந்த உச்சிமாநாடு என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments