ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள Stree 2 இந்தி திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.
கதைக்களம்
மத்திய பிரதேச மாநிலத்தின் சந்தேரி எனும் சிறிய நகரில், ஆண் பேய் ஒன்று அடுத்தடுத்து பெண்களை கடத்தி செல்கிறது.
அவர்களில் ஹீரோவின் நண்பர் பிட்டுவின் காதலியும் ஒருவர்.
தனது காதலியை காப்பாற்ற வேண்டும் என்று பிட்டு நண்பர் விக்கியிடம் கேட்கிறார்.
விக்கி களத்தில் இறங்க, அவருடன் துணைக்கு ஹீரோயின் ஷ்ரத்தா கபூரும் கைகோர்க்க, இறுதியில் பெண்களை எப்படி பேயிடம் இருந்து மீட்டார்கள் என்பதே படத்தின் கதை.
படம் பற்றிய அலசல்
2018ஆம் ஆண்டில் வெளியான Stree படத்தின் தொடர்ச்சியாக இப்படம் வெளியாகியுள்ளது.
முதல் பாகத்தில் ஸ்த்ரீ என்ற பெண் பேய், குறிப்பிட்ட பண்டிகை நாட்களில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் வந்து, இரவில் தனியாக செல்லும் ஆண்களை கவர்ந்து செல்லும்.
அதன் பின்னணி ஒரு புத்தகம் மூலம் தெரிய வரும். ஆனால் அதில் சில பக்கங்கள் காணாமல் போயிருக்கும். எனினும், ஸ்த்ரீயிடம் இருந்து ஹீரோ ராஜ்குமார், ஷ்ரத்தா கபூர் இருவரும் போராடி ஆண்களை மீட்பார்கள். ஸ்த்ரீயும் திரும்பி வராதபடி செய்துவிடுவார்கள்.
இரண்டாம் பாகத்தில் காணாமல் போன பக்கங்களில் கூறப்பட்டிருந்த விஷயங்கள் வெளியாகும்.
அதாவது, ஸ்த்ரீ வரவில்லை என்றால் பெண்களை கடத்திச் செல்லும் ‘சர்கத்தா’ எனும் ஆண் பேய் வந்துவிடும்.
அப்படி டவுனுக்குள் வரும் சர்கத்தா, பிட்டுவின் காதலி மட்டுமின்றி பல பெண்களையும் கடத்திச் சென்றுவிடுகிறது.
அந்த காட்சிகள் திகிலூட்டும் வகையில் இருந்தாலும், நகைச்சுவைக்கும் பஞ்சமில்லாத வகையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் அமர் கௌஷிக்.
முதல் பாகத்தைப் போலவே ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
சுவாரஸ்யத்திற்கு சற்றும் குறைவில்லாத திரைக்கதையினால் படம் எங்கும் bore அடிக்கவில்லை.
அதேபோல் Ghost universe-யில் இந்தப் படம் இணைந்திருப்பதால் சர்ப்ரைஸாக இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் இதில் வருகின்றன.
ஷரத்தா கபூர் யார் என்கிற உண்மையை கடைசிவரை தக்கவைத்த இயக்குநரின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டலாம்.
தமன்னாவின் ஆஜ் கி ராத் பாடல் அருமை. மற்றப்பாடல்களும் ரசிக்கும்படி உள்ளது.
மார்வெல் படங்கள் போல் இதிலும் Mid credit, Post Credit என சில காட்சிகள் உள்ளதால், பொறுத்திருந்து பார்த்தால் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கிடைக்கும்.
கண்டிப்பாக முதல் பாகத்தை (தமிழ் டப்பிங் உள்ளது) பார்த்துவிட்டு வந்தால் தான் Stree 2 உடன் ஒன்ற முடியும்.
க்ளாப்ஸ்
படம் முழுக்க தெறிக்கும் நகைச்சுவை காட்சிகள்
ஆங்காங்கே வரும் சில திகில் காட்சிகள்
நேர்த்தியான திரைக்கதை
பல்ப்ஸ்
பெரிதாக ஒன்றும் இல்லை