ஹாலிவுட்டில் மார்வல் படங்கள் வருகிறது என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதுகலமாக ஆகிவிடுவார்கள். அப்படி இயக்குனர் Kelly Marcel இயக்கத்தில் டாம் ஹார்டி நடிப்பில் வெனம் சீரியஸின் கடைசி பாகமாக வெளிவந்துள்ள வெனம் தி லாஸ்ட் டான்ஸ் எப்படியுள்ளது என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
டாம் ஹார்டி மெக்சிகோ நாட்டில் தலைமறைவாக இருக்க, அவரை தேடி அமெரிக்கா போலிஸ் ராணுவம் அலைகிறது. அதே நேரத்தில் வேற்று கிரகத்தில் இருக்கும் ஒருவன் பூமியை அழிக்க கோடக்ஸ் என்ற பொருளை தேட, பல விசித்திர மிருகங்களை பூமிக்கு அனுப்புகிறான்.
அந்த கோடக்ஸ் டாம் ஹார்டி-யிடம் இருக்க, பிறகு என்ன ஒரு பக்கம் வேற்று கிரக மிருகங்கள், இங்கோ ராணுவம் இப்படி இரண்டு பேரிடமும் சிக்குகிறார் டாம் ஹார்டி.
இதிலிருந்து எல்லாம் வழக்கம் போல் தப்பித்தாரா, இல்லை சிக்கினாரா என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
டாம் ஹார்டி எப்போதும் போல் வெனம்-யை தன் உடலில் தாங்கிக்கொண்டு அதனுடன் பேசும் காட்சிகள் சிரிப்பை வர வைக்கின்றது.
அதிலும் குதிரை வெனம் ஆக மாறும் காட்சி கிராபிக்ஸ் அட்டகாசம். ஆனால், படம் வெறும் கிராபிக்ஸ் சண்டை காட்சிகளை மட்டுமே நம்பியுள்ளது.
அழுத்தமாக ஒரு காட்சி கூட இல்லை என்பதே வருத்தம். கிளைமேக்ஸில் பல வெனம் பல சூப்பர் பவருடன் மிருகங்களுடன் சண்டைப்போடும் காட்சி பிரமாண்டம். அதே நேரத்தில் இது தான நடக்கப்போவுது என்ற அடுத்தடுத்து யூகிக்க கூடிய காட்சிகளாக வருவது சுவார்ஸ்யம் குறைகிறது.
மார்டின் என்ற ஒரு பேமிலி படத்தில் வருகிறது, அவர்கள் எல்லாம் வேண்டுமென்றே சில எமோஷ்னல் காட்சி, காமெடி இது போன்ற சீன்கள் வேண்டும் என சேர்த்தது போல் இருந்தது.
க்ளாப்ஸ்
கிராபிக்ஸ் சண்டை காட்சிகள்
பல்ப்ஸ்
சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை மற்றும் காட்சிகள்.
மொத்தத்தில் வெனம் தேஞ்சு கட்டெறும்பு ஆகிவிட்டது.
2.5/5