Wednesday, December 4, 2024
Homeசினிமாvijay about kallakurichi incedent

vijay about kallakurichi incedent


கள்ளச்சாராயம்

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

காலை நிலவரப்படி சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவதால் மாநிலம் முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.



நடிகரும் த.வெ.க கட்சியின் தலைவருமான விஜய், விஷ சாராயத்தை அருந்தி சிகிச்சை பெற்று வரும் நபர்களை மருத்துவமனை சென்று நேரில் சந்தித்தார்.

அறிக்கை 




இந்நிலையில் த.வெ.க கட்சியி, பொதுச் செயலாளர் என்.ஆனந்த், அறிக்கை ஒன்றை எக்ஸ் தலத்தில் வெளியிட்டுள்ளனர்.

அதில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்குத் தலைவர்
@actorvijay
அவர்கள் உத்தரவு!


தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து
@tvkvijayhq
மாவட்ட நிர்வாகிகளுக்கும் தளபதி விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.


எனவே தலைவர் அவர்களின் உத்தரவின்படி, கழக நிர்வாகிகள், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை உடனடியாகச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments