சித்தாந்த் சதுர்வேதி, மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘யுத்ரா’ இந்தி திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.
கதைக்களம்
கார் விபத்தில் போலீஸ் அதிகாரியான தந்தை மற்றும் தாயை பறிகொடுக்கும் யுத்ரா, அதீத கோபம் கொண்ட நபராக கார்த்திக் ராதோரிடம் வளர்கிறார்.
அவரது கோபத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என நினைக்கும் ரஹ்மான் சித்திக், போதைப்பொருள் தடுப்பிற்கான ரகசிய அதிகாரியாக செயல்பட வேண்டும் என யுத்ராவிடம் கேட்கிறார்.
அதனை யுத்ராவும் ஏற்றுக்கொண்டு போதைப்பொருள் கும்பலிடம் சேர்க்கிறார். அதன் பின்னர் நடக்கும் சம்பவங்களே படத்தின் கதை.
படம் பற்றிய அலசல்
ரவி உத்யாவர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். வழக்கமான கதை தான் என்றாலும் சுவாரஸ்யமான காட்சிகள் மூலம் நேர்த்தியாக கையாண்டிருக்கிறார்.
ரொமான்டிக் ஹீரோவாக வலம் வந்த சித்தாந்த் சதுர்வேதி இப்படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.
சண்டைக்காட்சிகளில் அதகளம் செய்யும் சித்தாந்த் டான்ஸ், ரொமான்ஸ், எமோஷன் காட்சிகள் என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார்.
மாளவிகா மோகனன் ரொமான்ஸ் காட்சிகள் மட்டுமின்றி, ஒரு சண்டைக்காட்சியில் மிரட்டியிருக்கிறார்.
ஒரு சில ட்விஸ்ட்கள் எளிதில் கணிந்துவிடும் வகையில் இருப்பதால் ஒர்க்அவுட் ஆகவில்லை.
எனினும் பரபரப்பான சண்டைக்காட்சிகள் படத்தை தாங்கி நிற்கிறது.
ராம் கபூர், கஜ்ராஜ் ராவ், ராஜ் அர்ஜுன் தங்களது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.
Kill படத்தில் வில்லனாக மிரட்டிய ராகவ் ஜூயலின் கதாபாத்திரத்தை சரியாக கையாளாதது ஏமாற்றம்.
க்ளாப்ஸ்
சண்டைக்காட்சிகள்
திரைக்கதை
பல்ப்ஸ்
வழக்கமான போலீஸ் கதை