Sunday, September 8, 2024
Homeசினிமாஅஜித் என்னைப்பற்றி அப்படி பேசுவார் என நான் எதிர்ப்பார்க்கவே இல்லை- விஜய்யின் அம்மா ஷோபா

அஜித் என்னைப்பற்றி அப்படி பேசுவார் என நான் எதிர்ப்பார்க்கவே இல்லை- விஜய்யின் அம்மா ஷோபா


விஜய்

நடிகர் விஜய் தனது அரசியல் அறிவிப்பு வெளியிட்டதில் இருந்து பட வேலைகளை முடிப்பதில் மிகவும் மும்முரமாக உள்ளார்.

இப்போது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்க கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து விஜய் கடைசி படத்தை யார் இயக்கப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளார்கள், ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் தகவல் வரவில்லை.

சில வாரங்களுக்கு முன் விஜய் தனது பெற்றோர்களுடன் எடுத்த புகைப்படம் செம வைரலாகி வந்தது.

இப்போது கோட் அல்லது விஜய்யின் கடைசி பட அப்டேட்டிற்காக தான் ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.

ஷோபா பேட்டி

நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார். அதில் ஒரு பேட்டியில் ஷோபா அவர்கள் பேசும்போது, குஷி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அஜித் வந்திருந்தார்.

அப்போது பேசிய அவர், விஜய்யும் நானும் ராஜாவின் பார்வையிலே படத்தில் இணைந்து நடித்தோம், அப்போது விஜய்யின் வீட்டிலிருந்து எனக்கும் சேர்த்து உணவு வரும்.

ஷோபா அம்மாவின் கையால் நான் சாப்பிட்டிருக்கிறேன், அதை என்னால் மறக்கவே முடியாது என கூறினார்.

அவர் மேடையில் அப்படி பேசுவார் என நான் எதிர்ப்பார்க்கவே இல்லை என்று கூறியுள்ளார். 

அஜித் என்னைப்பற்றி அப்படி பேசுவார் என நான் எதிர்ப்பார்க்கவே இல்லை- விஜய்யின் அம்மா ஷோபா | Vijay Mom Shoba Talks About Actor Ajith

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments