நடிகை ராதிகா
நடிகை ராதகா இவருக்கு அறிமுகம் என்பது தேவையில்லை.
அந்த அளவிற்கு தனது நடிப்பின் மூலம் படங்களால் அதிகம் பேசப்பட்டவர். மார்க்கெட் இருந்த வரை நாயகியாக நடித்து வந்தவர் பின் சின்னத்திரை பக்கம் சென்றார்.
ராடான் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடர்ந்து சீரியல்கள் தயாரித்து நடித்தும் வந்தார்.
அதேபோல் படங்களிலும் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். கடைசியாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார், ஆனால் இந்த முறை அவருக்கான வெற்றி அமையவில்லை.
லேட்டஸ்ட் வீடியோ
தற்போது அவரது வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சரத்குமாரின் மகள் வரலட்சுமிக்கு தொழிலதிபர் நிக்கோல் என்பவருடன் வரும் ஜுலை 2ம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது.
அதற்காக பிரபலங்களை நேரில் சந்தித்து திருமண பத்திரிக்கை கொடுத்து வருகிறார் வரலட்சுமி. இந்த நிலையில் நடிகை ராதிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் மகனுக்கு கியூட் வீடியோவுடன் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
அதைப்பார்த்த சிலர் உங்கள் மகனா நன்றாக வளர்ந்துவிட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.