பிரமாண்ட படங்கள்
ஹாலிவுட் சினிமா என்றால் நம் அனைவருக்கும் உடனடியாக நினைவிற்கு வரும் திரைப்படங்களில் ஒன்று டைட்டானிக், அவதார்.
உலகளவில் முதன் முதலில் ரூ. 100 கோடி வசூல் செய்த திரைப்படமாக டைட்டானிக் பார்க்கப்படுகிறது. மேலும் இன்று வரை உலகளவில் அதிகம் வசூல் செய்த திரைப்படமாகவும் அவதார் தான் இடம்பிடித்துள்ளது.
ஜான் லாண்டாவ் மரணம்
இப்படி ஜேம்ஸ் கமரூன் கண்ட கனவுகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியவர் தயாரிப்பாளர் ஜான் லாண்டாவ்.
இவர் கடந்த 16 மாதங்களாக புற்றுநோயுடன் போராடி வந்த ஜான் லாண்டாவ் (63 வயது) நேற்று ஜூலை 6ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இவருடைய மரணம் ரசிகர்களுக்கும், திரையுலகை சேர்ந்தவர்களுக்கு பெரும் துயரத்தை கொடுத்துள்ளது. இவர் முதன் முதலில் தயாரித்த திரைப்படம் Campus Man. பின் டைட்டானிக், Solaris, அவதார், அவதார் தி வெ ஆப் வாட்டர் ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.
மேலும் அவதாரின் மூன்று மற்றும் நான்காம் பாகங்கள் இனிமேல் தான் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.