சிங்கப்பெண்ணே
தனுஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு புதுமுகங்கள் நடிக்க சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கிய தொடர் சிங்கப்பெண்ணே.
மனீஷா மஹேஷ், தர்ஷக் கௌடா, அமல் ஜித் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் 200க்கும் மேற்பட்ட எபிசோடுகளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.
குடும்ப சூழ்நிலைக்காக கிராமத்தில் இருந்து சென்னை வந்து ஒரு துணி கார்மென்ட்ஸில் பணிபுரிகிறார். அங்கு அவர் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகளை சுற்றிய கதை நகர்ந்து வருகிறது.
இன்றைய புரொமோ
ஆனந்தியை மகேஷ் ஒருபக்கம், இன்னொரு பக்கம் அன்பு இருவரும் காதலிக்கிறார்கள். ஆனால் ஆனந்தி யாருக்கு ஓகே கூறுவார், எப்படி அவரது காதல் பிரச்சனைகள் முடிவுக்கு வரும் என்பதை பொறுத்திருந்து காண்போம்.
இன்றைய எபிசோட் புரொமோவில் இரவு 12 மணிக்கு ஆனந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து முதல் ஆளாக அன்பு வாழ்த்துகிறார்.
அவருக்கு அடுத்து மகேஷ் போன் செய்து வாழ்த்து ஆனந்தி எனக்கு வாழ்த்திய 2வது நபர் நீங்கள் தான் என்று கூற முதலில் வாழ்த்து கூறியது யார் என கோபமாக கேட்கிறார். இதோ இன்றைய எபிசோட் புரொமோ,