ஆனந்த்-ராதிகா
2024ம் வருடம் ஆரம்பித்ததில் இருந்தே ஒரு திருமண கொண்டாட்டம் ஆரம்பித்துவிட்டது. வேறுயாரும் இந்தியாவின் பணக்காரர்களில் எப்போதும் டாப்பில் வரும் முகேஷ் அம்பானியின் மகன் திருமணம் தான்.
முதல் மகனுக்கு திருமணம் நடந்து குழந்தை உள்ள நிலையில் இரண்டாவது மகனுக்கு படு கோலாகலமாக திருமண கொண்டாட்டம் நடந்த வண்ணம் உள்ளது.
ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமணம் வரும் ஜுலை 12ம் தேதி நடைபெற உள்ளது.
அண்மையில் குஜராத்தி திருமணங்களின் முக்கிய நிகழ்வான தாய்மாமன் சீர் நிகழ்ச்சி (மாமேரு சடங்கு) முகேஷ் அம்பானியின் இல்லமான ஆன்டிலியாவில் கோலாகலமாக தொடங்கியது.
சம்பள விவரம்
இவர்களின் திருமண கொண்டாட்ட நிகழ்வில் ஹாலிவுட்டின் பிரபல பாடகர் ஜஸ்டின் பீபர் பாடல் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்சண்ட் திருமண நிகழ்வில் பாடுவதற்கு மட்டும் அவருக்கு இந்திய மதிப்புப்படி ரூ. 83 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.