வைரல் போட்டோ
திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்கள் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் என கேட்டு கேள்வி எழுப்பி வருவார்கள்.
அந்த வகையில் தற்போது பிரபல நடிகரின் தங்கையின் சிறு வயது புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
விஜய்யின் தங்கை
அவர் வேறு யாருமில்லை நடிகர் விஜய்யின் தங்கை வித்யா தான்.
ஆம், தனது சிறு வயதிலேயே உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்த வித்யாவின் புகைப்படம் தான் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
வித்யாவின் மரணத்திற்கு முன் விஜய் மிகவும் கலகலப்பான ஆளாக இருந்தாராம். தனது தங்கையின் மரணத்திற்கு பின் தான் அமைதியான நபராக விஜய் மாறிவிட்டார் என அவருடைய தாய் ஷோபா சந்திரசேகர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.