இந்திய அளவில் பிரம்மாண்ட படங்களுக்கு பெயர்பெற்றவர் இயக்குனர் ஷங்கர். எந்திரன், 2.0 என அவரது பல படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டவை.
தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இயக்கி இருக்கும் ஷங்கர், அதன் ப்ரோமோஷனுக்காக பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார்.
மகன் நடிக்க போகிறாரா?
ஷங்கரின் மகள் அதிதி ஏற்கனவே ஹீரோயினாக அறிமுகம் ஆகி தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் மகன் அர்ஜித் நடிக்க போகிறாரா என சமீபத்திய பேட்டியில் ஷங்கரிடம் கேட்கப்பட்டு இருக்கிறது.
என் மகனுக்கு 20 வயசுக்கு மேல் ஆகிவிட்டது. ஒருமுறை நடிக்க போகிறேன் என சொல்கிறான். அடுத்த முறை இயக்குனர் ஆகபோகிறேன் என சொல்கிறான். அதனால் அவரே முடிவு செய்யட்டும் என விட்டு விட்டேன் என ஷங்கர் கூறி இருக்கிறார்.