உலக பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளருக்கான எலான் மஸ்க் இன்று போட்ட ஒரு ட்வீட் மூலமாக தமிழ் படம் ஒன்று உலக வைரல் ஆகி இருக்கிறது.
ஆப்பிள் போன் நிறுவனம் ஓப்பன் AI நிறுவனத்துடன் செய்திருக்கும் ஒப்பந்தம் பற்றி தான் மஸ்க் விமர்சித்து பதிவிட்டு இருக்கிறார்.
தமிழ் பட மீம்
தப்பாட்டம் என்ற தமிழ் படத்தில் வரும் காட்சி சில வருடங்களுக்கு முன்பு மீம் ஆக இணையத்தில் வலம் வந்தது. அதை தான் தற்போது மஸ்க் ஆப்பிள் நிறுவனத்தை விமர்சிக்க பதிவிட்டு இருக்கிறார்.
மஸ்க் ட்வீட் போட்டு உலக வைரல் ஆக்கியதற்கு நன்றி என தப்பாட்டம் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் துரை சுதாகர் நன்றி கூறி இருக்கிறார்.
— Elon Musk (@elonmusk) June 10, 2024