நடிகர் வடிவேலு உடன் ஏராளமான காமெடி காட்சிகளில் நடித்த வெங்கல் ராவ் தற்போது உடல்நலம் குன்றி சிகிச்சையில் இருக்கிறார். அவரது கை மற்றும் கால் செயலிழந்து சிகிச்சைக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாக வெங்கல் ராவ் வீடியோ வெளியிட்டு இருந்தார்.
அவருக்கு சிம்பு இரண்டு லட்சம் ருபாய், KPY பாலா 1 லட்சம் ருபாய், ஐஸ்வர்யா ராஜேஷ் 25 ஆயிரம் என உதவி செய்திருந்தனர்.
வடிவேலு உதவி
இந்நிலையில் நடிகர் வடிவேலு ஒரு லட்சம் ரூபாயை வெங்கல் ராவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். வடிவேலு தன்னுடன் நடித்த நடிகர்கள் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும் அவர்களுக்கு உதவி செய்ய மாட்டார் என நடிகர்களே சிலர் அவர் மீது இதற்கு முன்பு குற்றச்சாட்டை வைத்திருந்தனர்.
அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வடிவேலு தற்போது வெங்கல் ராவுக்கு உதவி செய்திருக்கிறார்.
வெங்கல் ராவுடன் போனில் பேசிய வடிவேலு, அவருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசினாராம்.