கோட்
விஜய் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தில் அவருடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கோட் படத்தின் ரிலீஸுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் விஎஃப்எக்ஸ் உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
அண்மையில் இயக்குனர் வெங்கட் பிரபு அமெரிக்காவில் உள்ள VFX நிறுவனத்தில் கோட் படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்திருந்தார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
பேட்டி
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட கங்கை அமரன் கோட் படம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், கோட் படத்திற்கு ஒரு குத்து பாடல் எழுதி, பாடி இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அந்த பாடலுக்கு திரிஷா, விஜய் இணைந்து நடனமாட நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.