தற்போது அதிகம் பாப்புலராக இருக்கும் நட்சத்திரங்களின் குழந்தை பருவ போட்டோக்களை பார்த்தால், “அவரா இது” என கேட்கும் அளவுக்கு தான் இருக்கும்.
அப்படி ஒரு சின்னத்திரை பிரபலத்தின் போட்டோ தான் இது. அவரது பாக்கெட்டில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் போட்டோவை அப்போதே வைத்திருக்கிறார். யார் என கண்டுபிடித்தீர்களா?
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்..
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி ரோலில் நடித்து பெரிய அளவில் பிரபலம் ஆன நடிகர் ஸ்டாலின் முத்து தான் அது.
அவர் சின்ன வயதில் அப்பா மற்றும் இரண்டு அக்காக்கள் உடன் இருக்கும் போட்டோ தான் இது.
சட்டையில் ரஜினி போட்டோ இருப்பதை குறிப்பிட்டு “அன்று முதல் இன்று வரை தலைவரின் ரசிகன் நான்” என ஸ்டாலின் முத்து கூறி இருக்கிறார்.