நடிகர் மாதவன்
தொலைக்காட்சி தொடர்கள், விளம்பரங்கள் என டிவியில் முதலில் களமிறங்கியவர் பின் 1996ம் ஆண்டு இஸ் ராத் கி சுபஹ் நஹி திரைப்படத்தின் மூலம் ஒரு திரைப்படத்தில் முதலில் அறிமுகமானார் மாதவன்.
தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000ம் ஆண்டு வெளியான அலைபாயுதே படத்தின் முதல் இளம் ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் 2001ம் ஆண்டு வெளியான மின்னலே படம் இன்னும் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.
பின் ரன், பிரியமான தோழி, ஜேஜே, ஆயுத எழுத்து என நடித்து வந்தவர் இடையில் கொஞ்சம் எடுத்து பின் இறுதிச்சுற்று மூலம் மீண்டும் ஒரு வலம் வர ஆரம்பித்தார்.
அம்மாவின் போட்டோ
சமீபத்தில் இன்ஸ்டாவில் மாதவனின் அம்மா தனது இன்ஸ்டாவில் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, க்ளீன் ஷேவ் செய்து காணப்படும் எனது மகனை மிகவும் பிடிக்கும்.
வெள்ளை தாடியை இனி வைக்க கூடாது என்பதற்காகவே இன்று நான் புகைப்படம் எடுத்தேன் என பதிவிட்டுள்ளார். அவரது பதிவும், புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.