வடிவேலு உடன் ஏராளமான காமெடி காட்சிகளில் நடித்து இருப்பவர் வெங்கல் ராவ். தேங்காய் 6 ரூபாய் காமெடி, நாய் கடி டாக்டர் காமெடி, சைக்கோ காமெடி என வடிவேலு உடன் அவர் நடித்த அனைத்து காட்சிகளும் சூப்பர்ஹிட் தான்.
ஆனால் அவர் தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் உடல்நலக்குறைவாக இருப்பதாக சமீபத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார். அவர் கை, கால் செயலிழந்து சிகிச்சைக்கு பணமில்லாமல் கஷ்டப்படுவதாக உதவி கேட்டு வீடியோ வெளியிட்டு இருந்தார்.
நடிகை செய்த உதவி
கஷ்டப்படும் நடிகர் வெங்கல் ராவுக்கு நடிகர் சிம்பு இரண்டு லட்சம் ருபாய் உதவி செய்து இருந்தார். அதனை தொடர்ந்து நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் 25 ஆயிரம் ரூபாய் அவருக்கு அனுப்பி இருக்கிறாராம்.
மேலும் விஜய் டிவி KPY பால ஒரு லட்சம் ரூபாயை வெங்கல் ராவின் சிகிச்சைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்.
இது போல மற்ற நடிகர்களும் அவருக்கு உதவ வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.