Sunday, November 3, 2024
Homeசினிமாசிம்பு, கமல் உட்பட நான்கு ஹீரோக்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு! அதிர்ச்சி முடிவு

சிம்பு, கமல் உட்பட நான்கு ஹீரோக்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு! அதிர்ச்சி முடிவு


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

சில முன்னணி ஹீரோக்கள் தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு சொன்னபடி கால்ஷீட் கொடுக்காமல் ஏமாற்றிவருவதாக ஏற்கனவே புகார்கள் வந்து இருந்தது. அந்த ஹீரோக்களுக்கு ரெட் கார்டு போட தற்போது செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது.

நான்கு ஹீரோக்கள்

கமல், தனுஷ், சிம்பு, விஷால் ஆகியோரின் படங்களுக்கு இனி எந்த ஒத்துழைப்பும் தரப்போவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்து இருக்கிறது.

உத்தமவில்லன் நஷ்டத்திற்கு ஈடுகட்டும் வகையில் ஒரு படம் நடித்துக்கொடுப்பதாக கமல் கொடுத்த வாக்குறுதியை பல வருடங்களாக கமல் செய்யாமல் இருக்கிறார்.


கொரோனா குமார் படம் தொடர்பாக சிம்பு மீது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் புகார் கூறி இருந்தார். அதே போல தனுஷ் மீது தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் புகார் கூறி இருந்தது.

தொடர்ந்து இந்த நடிகர்கள் மீது புகார்கள் வந்ததால் தற்போது ரெட் கார்டு போடுவதாக தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்து இருக்கிறது.
 

சிம்பு, கமல் உட்பட நான்கு ஹீரோக்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு! அதிர்ச்சி முடிவு | Kamal Simbu Dhanush Red Card By Producer Council

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments