சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்தகட்டமாக விறுவிறுப்பான காட்சிகள் வரவுள்ளது.
ஆம், மனோஜ் மற்றும் விஜயா இருவரும் இணைந்து தங்களிடம் கொடுத்தது தங்க நகை இல்லை, கவரிங் நகை தான் என முத்து – மீனா இருவரும் அண்ணாமலையிடம் கூறிவிடுகிறார்கள்.
வசமாக மாட்டிய விஜயா, மனோஜ்
அப்போது தனது தங்களுடைய தவறு வெளியே வரக்கூடாது என்பதற்காக விஜயா அந்த பழியை முத்து – மீனா மீது சுமத்திவிடுகிறார். ஆம், முத்து – மீனா இருவரும் தங்களிடம் கொடுத்ததே தங்க நகை இல்லை கவரிங் தான் என கூறி விடுகிறார்.
இதனால் முத்துவும் மீனாவும் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள். இந்த சமயத்தில் இந்த பிரச்சனைக்கு தீர்வு வேண்டும் என்கிற காரணத்தினால், போலீஸில் புகார் கொடுத்து விடலாம் என ஸ்ருதி கூறுகிறார்.
இதன்பின் வீட்டின் தலைவரான அண்ணாமலை என்ன முடிவு எடுக்க போகிறார்? மேலும் என்னென்ன விஷயங்கள் எல்லாம் நடக்கப்போகிறது என்று வரும் வாரம் எபிசோட்களில் பொறுத்திருந்து பார்ப்போம்.