பிரியங்கா நல்காரி
தெலுங்கு சினிமாவில் சீரியல்கள் நடித்து பிரபலமாகி அப்படியே தமிழ் சின்னத்திரை பக்கம் வந்தவர் நடிகை பிரியங்கா நல்காரி.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா தொடரில் நாயகியாக களமிறங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். அந்த தொடரின் மூலம் நல்ல ரீச் பெற்றவர் அடுத்து என்ன சீரியல் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. +
அவர் ஜீ தமிழில் சீதா ராமன் என்ற தொடரில் நாயகியாக நடித்து வந்தார், பின் அந்த தொடரில் இருந்து வெளியேறியவர் அதே தொலைக்காட்சியில் நல தமயந்தி தொடரில் கமிட்டாகி நடித்தார்.
ஆனால் இப்போது அந்த முடிவுக்கு வந்துவிட்டது, அடுத்து என்ன சீரியல் நடிப்பார் என தெரியவில்லை.
புதிய வேலை
தனது நீண்டநாள் காதலரை மலேசியாவில் முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டவர் அங்கேயே செட்டில் ஆகியுள்ளார். தற்போது அங்கு ஒரு உணவகத்தை அவர் தனது கணவருடன் சேர்ந்து திறந்துள்ளார்.
தற்போது அந்த உணவகத்தின் பில் போடும் வேலையை அவர் செய்து வருவது போல் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதனால் ரசிகர்கள் சீரியலில் நடிப்பதை தாண்டி இந்த வேலையை தொடங்கிவிட்டாரா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.