சந்தானம்
நகைச்சுவை நடிகராக தனது திரை பயணத்தை துவங்கி இன்று ஹீரோவாக கலக்கிக்கொண்டிருக்கிறார் சந்தானம்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த இங்கு நான் தான் கிங்கு திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
ஆனால், டிடி returns மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக டிடி returns 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பில் இருக்கிறது.
கைவிடப்பட்ட படம்
இந்த நிலையில், சந்தானம் ஹீரோவாக நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகவிருந்த திரைப்படம் ‘மன்னவன் வந்தானடி’.
யுவன் ஷங்கர் ராஜா தான் இப்படத்திற்கு இசையமைப்பாளர். படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், சில காரணங்களால் மன்னவன் வந்தானடி படம் கைவிடப்பட்டுள்ளது. ஆனால், ரசிகர்கள் மீண்டும் இப்படத்தை எதிர்பார்க்கின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.