ஜீ தமிழ்
தமிழ் சின்னத்திரையில் போட்டிபோட்டு நிறைய வெற்றிகரமாக தொடர்களை சன் மற்றும் விஜய் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி வருகிறார்கள். டிஆர்பி ரேட்டிங் எடுத்துக்கொண்டால் இந்த இரண்டு தொலைக்காட்சியின் தொடர்கள் தான் டாப்பில் இருக்கும்.
இந்த இரண்டு தொலைக்காட்சிகளை தாண்டி மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது ஜீ தமிழ். இதில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம், அண்ணா போன்ற தொடர்களுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
அடுத்தடுத்தும் நிறைய புதிய தொடர்கள் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.
புதிய தொடர்
இந்த நிலையில் தான் ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் ஒரு தொடர் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
அதாவது மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான MizhiRandilum என்ற தொடர் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு விரைவில் ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ளதாம்.
மலையாளத்தில் இந்த தொடரில் விஜய் டிவி ஹிட் சீரியல் மௌன ராகம் 2 தொடரில் நடித்த சல்மானுள் தான் நாயகனாக நடித்துள்ளார்.