சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து சூர்யா 44 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். கொரோனா காலகட்டத்தில் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்து வெற்றியடைந்த திரைப்படம் சூரரைப் போற்று.
இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். உண்மை சம்பவத்தை மையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்ததால் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்தது.
தமிழில் நேரடியாக ஓடிடி-யில் வந்திருந்தாலும், தற்போது இந்தியில் ரீமேக் ஆகியுள்ள இப்படம் திரையரங்கங்களில் வெளிவரவுள்ளது.
கேமியோ
ஆம், தமிழில் சூர்யா ஹீரோவாக நடித்து வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படம் இந்தியில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்து Sarfira எனும் தலைப்பில் ரீமேக் ஆகியுள்ளது. இப்படத்தையும் சுத்த கொங்கரா தான் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளிவந்துள்ள நிலையில், நடிகர் சூர்யா இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். அந்த காட்சியும் Sarfira ட்ரைலரில் இடம்பெற்றுள்ளது. மேலும் தமிழில் நடிகர் மோகன் பாபு நடித்திருந்த கதாபாத்திரத்தில் இந்தியில் சரத்குமார் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ நீங்களே பாருங்க..