டாப் நாயகி
சினிமாவில் இப்போது ஒரு புது டிரண்ட் பிரபலங்களின் சிறுவயது போட்டோ தான்.
நாமும் தினமும் ஏதாவது ஒரு பிரபலத்தின் சின்ன வயது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறோம். அப்படி இன்றும் ஒரு நாயகியின் போட்டோ தான் வைரலாகிறது. இவர் 80களில் டாப் நாயகியாக வலம் வந்த பிரபல நடிகையின் மூத்த மகளாவார்.
இவர் சினிமாவில் அறிமுகமாகி சில படங்களே நடித்தார், மலையாளத்திலும் சில படங்கள் நடித்தார், அதன்பிறகு படங்கள் பக்கம் காணவில்லை.
மாறாக தனது சொந்த தொழில்களில் கவனம் செலுத்தி சிறந்த தொழிலதிபர் விருது எல்லாம் பெற்றார்.
யார் இவர்
இவர் ஜீவாவுடன் ஒரு படம் நடித்தார், அதுதான் அவருக்கு தமிழில் முதல் படம். முதல் படத்திலேயே நல்ல வெற்றியை கண்டவர் தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுப்பார் என்று பார்த்தால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.
சமீபத்தில் அவருக்கு கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது, அந்த புகைப்படங்களையும் அவரும் அவரது அம்மாவும் இன்ஸ்டாவில் பதிவிட்டனர்.
இந்த விவரங்களை பார்த்ததும் யார் அந்த நடிகை என்று தெரிந்திருக்கும், வேறுயாரும் இல்லை நடிகை கார்த்திகா தான்.