விஜய் சேதுபதி
மக்கள் செல்வன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடந்த வாரம் மகாராஜா திரைப்படம் வெளிவந்து வரவேற்பை பெற்றுள்ளது.
இது விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாகும். இப்படத்தை நித்திலன் என்பவர் இயக்கியிருந்தார். மகாராஜா திரைப்படத்திற்காக அப்படக்குழு அனைவரும் தீவிரமான ப்ரோமோஷன் வேளைகளில் ஈடுபட்டு வந்தனர்.
அதில் விஜய் தொலைக்காட்சியில் ஸ்டார்ட் ம்யூசிக் மற்றும் குக் வித் கோமாளி என இரு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். இதில் தொகுப்பாளினி பிரியங்கா தொகுத்து வழங்கிய ஸ்டார்ட் ம்யூசிக் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியிடம் இசை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இசை
அப்போது அங்கு இருந்த நடிகர் நட்டி நட்ராஜ் ‘விஜய் சேதுபதி இசை கற்றுக்கொண்டு இருக்கிறார்’ என கூறினார். இதன்பின் பேசிய விஜய் சேதுபதி ‘ஆம், இப்போது தான் கற்றுக்கொள்ள ஆரம்பித்து இருக்கிறேன்’ என கூறினார்.