தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் ராயன். இப்படத்தை அவரே இயக்கியுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
சமீபத்தில் நடிகர் தனுஷ் குறித்து பல வதந்திகள் பேசப்பட்டது. இந்த விஷயம் பெரும் சர்ச்சையாகவும் மாறியது. இதுகுறித்து தனுஷ் ராயன் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது :
“நான் யாருன்னு எனக்கு தெரியும், என் அப்பா, அம்மாவுக்கு தெரியும், என் பசங்களுக்கு தெரியும், என் ரசிகர்களுக்கு தெரியும், ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக பாடி ஷேமிங்கிற்கு ஆளானவன் நான், தேவையில்லாத வதந்திகள், கெட்டப் பெயர், முதுகில் குத்தும் சம்பவம் என பல விஷயங்கள் நடந்தாலும், இன்னமும் நான் இப்படி உங்கள் வந்து நிற்க காரணமே நீங்க தான்” என பேசியுள்ளார்.
இதன்மூலம் தன்னை பற்றி உலா வந்த அனைத்து வதந்திகளுக்கு தனுஷ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.