Sunday, February 9, 2025
Homeசினிமாபல கோடி மதிப்பில் Porsche புதிய காரை வாங்கியுள்ள நடிகர் பிரித்விராஜ்... எத்தனை கோடி தெரியுமா?

பல கோடி மதிப்பில் Porsche புதிய காரை வாங்கியுள்ள நடிகர் பிரித்விராஜ்… எத்தனை கோடி தெரியுமா?


நடிகர் பிரித்விராஜ்

தமிழ் சினிமா ரசிகர்கள் ஒரே மொழி படங்களை காண்பது இல்லை.

இப்போதெல்லாம் அதிலும் கொரோனா காலத்தில் நிறைய மொழி படங்களை வீட்டில் இருந்து மக்கள் அதிகம் பார்க்க ஆரம்பித்தார்கள். இதனால் மற்ற மொழி நடிகர்களும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிரபலம் ஆகிவிட்டார்கள்.

அப்படி தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் மற்ற மொழி நடிகர்களில் ஒருவர் தான் பிரித்விராஜ். இவர் தமிழில் கனா கண்டேன், பாரிஜாதம், மொழி மற்றும் கண்ணாமூச்சி ஏனடா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அண்மையில் இவரது நடிப்பில் வெளியான ஆடுஜீவிதம் படம் பட்டய கிளப்பி பாக்ஸ் ஆபிஸிலும் செம வசூல் வேட்டை நடத்தியது.


புதிய கார்

சமீபத்தில் வெற்றிப்படத்தை கொண்ட மகிழ்ச்சியில் இருக்கும் பிரித்விராஜ் புதிய கார் ஒன்றை வாங்கி உள்ளார். 3 முதல் 4 மாதங்களுக்கு முன்பு பிரித்விராஜ் Porsche நிறுவனத்தின் ஒரு உயர் ரக காரை வாங்கியுள்ளார்.

Porsche 911 GT3 Touring என்ற அந்த காரின் ஆரம்ப விலை சுமார் ரூ. 2.75 கோடி என்று கூறப்படுகிறது. அண்மையில் பிரித்விராஜ் புக் செய்த காரை அவரின் வீட்டிற்கே சென்று வழங்கியுள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை கார் நிறுவனமே தங்களது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளனர். 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments