நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜோடிகளில் விஜய்-த்ரிஷா முக்கியமானவர்கள்.
இவர்கள் ஒன்றாக இணைந்து நடித்த கில்லி மாபெரும் ஹிட், அப்படம் அண்மையில் ரீ-ரிலீஸ் ஆக திரையரங்குகளில் பட்டய கிளப்பியது. பல வருடங்களுக்கு பிறகு லியோ படத்தில் ஒன்றாக இணைந்து நடித்தார்கள்,
அடுத்து மீண்டும் எப்போது கில்லி போல் ஒரு படம் நடிப்பார்கள் என்று தான் ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் நடிகை த்ரிஷா, விஜய் பிறந்தநாளுக்கு ஒரு சூப்பரான புகைப்படம் வெளியிட படு வைரலானது.
புதிய வீடு
இப்போது இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது போல் அடுத்தடுத்து த்ரிஷா தமிழ், தெலுங்கு என பிஸியாக படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் த்ரிஷா ரூ. 17 கோடி மதிப்புள்ள ஒரு வீடு வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.