மதுமிதா
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கடந்த வாரம் முடிவுக்கு வந்த சீரியல் எதிர்நீச்சல். இந்த தொடரில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளார் நடிகை மதுமிதா.
இவர் அடுத்த எந்த சீரியலில் நடிக்கப்போகிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மதுமிதா தொடர்ந்து அதில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
மதுமிதா வெளியிட்ட வீடியோ
அந்த வகையில் தற்போது புஷ்பா 2 திரைப்படத்திலிருந்து வெளிவந்த SOOSEKI The Couple Song பாடலுக்கு ராஷ்மிகா போலவே நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அல்லு அர்ஜுன் – ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படத்தில் இருந்து வெளிவந்துள்ள இப்படம் தற்போது Youtube தளத்தில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த வீடியோ..