குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சியின் மாபெரும் வெற்றி நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த சீசனில் வெங்கடேஷ் பட் சில காரணங்களால் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக சமையல் கலையில் பிரபலமாக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக அசாத்திக்கொண்டு இருக்கிறார்.
கடந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் மகாராஜா படக்குழு கலந்துகொண்டு சிறப்பித்து இருந்தனர். அதுமட்டுமின்றி போட்டியாளர்களுடன் இணைந்து விஜய் சேதுபதியின் சமைத்தார்.
பிரியாணி சேலஞ்ச்
இந்த நிலையில், இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஸ்பெஷல் என்னவென்றால், பிரியாணி தான். ஆம், இந்த வாரம் முழுக்க பிரியாணி சேலஞ்ச் கொடுத்துள்ளனர். அதை லோகேஷ் கனகராஜின் விக்ரம் பட ஸ்டைலில் ப்ரோமோ வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ..