Saturday, December 7, 2024
Homeசினிமாவிஜய் படத்தை நிராகரித்த மீனா! நீங்க வேணும்னே தான் என் படத்தில் நடிக்கல என கோபமாக...

விஜய் படத்தை நிராகரித்த மீனா! நீங்க வேணும்னே தான் என் படத்தில் நடிக்கல என கோபமாக கேட்ட விஜய்


நடிகை மீனா ஒருகாலத்தில் கோலிவுட்டில் உச்ச நடிகையாக வலம் வந்தவர். ரஜினி, கமல், விஜயகாந்த், முரளி, சத்யராஜ் என பல முன்னணி நடிகர்கள் ஜோடியாக நடித்து இருக்கிறார்.

இருப்பினும் அவர் நடிகர் விஜய் ஜோடியாக நடித்ததே இல்லை. அது பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் மீனா பேசி இருக்கிறார்.

விஜய் கேட்ட வார்த்தை..

“நான் விஜய் உடன் ஜோடியாக நடித்ததில்லை. விஜய் நடித்த பிரெண்ட்ஸ் படத்திற்காக முதலில் என்னை தான் அணுகினர்.நானும் கதை கேட்டு பிடித்துவிட நடிப்பதாகக் கூறினேன். ஆனால் அவர்கள் கேட்ட தேதிகளை என்னால் ஒதுக்க முடியாததால் நான் நடிக்கவில்லை.”

“அதன் பின் தெறி படத்தில் என் மகள் விஜய் உடன் நடித்தபோது நானும் ஷூட்டிங் சென்றிருந்தேன். நீங்க வேணும்னு தானே என்னுடன் நடிக்கவில்லை என விஜய் கேட்டார்.”

“நான் கால்ஷீட் பிரச்சனையால் தான் நடிக்கவில்லை என விளக்கினேன். ஒரே நாளில் மூன்று படங்களில் நான் நடிக்க வேண்டிய நிலை இருந்தது என்பதை சொன்னபிறகு விஜய் புரிந்துகொண்டார்” என மீனா கூறி இருக்கிறார்.

இருப்பினும் ஷாஜகான் படத்தில் விஜய் உடன் ஒரு பாடலுக்கு மட்டும் மீனா டான்ஸ் ஆடி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.  

விஜய் படத்தை நிராகரித்த மீனா! நீங்க வேணும்னே தான் என் படத்தில் நடிக்கல என கோபமாக கேட்ட விஜய் | Why Meena Didn T Act With Vijay

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments