Saturday, December 7, 2024
Homeவிளையாட்டுஇலங்கை அணியை வீழ்த்தியது வங்கதேசம்

இலங்கை அணியை வீழ்த்தியது வங்கதேசம்


டல்லாஸ்: இலங்கைக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அமெரிக்காவின் டல்லாசில் நடந்த ‘டி-20’ உலக கோப்பை ‘டி’ பிரிவு லீக் போட்டியில் இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற வங்கதேசம் ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. பதும் நிசங்கா (47), தனஞ்செயா டி சில்வா (21) கைகொடுக்க இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 124 ரன் எடுத்தது. வங்கதேசம் சார்பில் முஸ்தபிஜுர், ரிஷாத் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.

சுலப இலக்கை விரட்டிய வங்கதேச அணி 19 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 125 ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தவ்ஹித் (40), லிட்டன் தாஸ் (36) கைகொடுத்தனர். ஏற்கனவே தென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்த இலங்கை அணி 2வது தோல்வியை பெற்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments