ரன்பீர் கபூர் நடித்த அனிமல் படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலம் ஆனவர் த்ருப்தி டிம்ரி.
அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ராஷ்மிகாவை விட இவருக்கு தான் அதிகம் புகழ் கிடைத்தது.
நேஷ்னல் கிரஷ் எனவும் அவரை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
14 கோடிக்கு வீடு
ஒரே படத்தில் உச்சத்திற்கு சென்ற நடிகை த்ரிப்தி டிம்ரி அடுத்து ஏராளமான படங்களில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
இந்நிலையில் அவர் மும்பை பாந்த்ரா வெஸ்ட் பகுதியில் 14 கோடி ரூபாய்க்கு ஒரு வீடு வாங்கி இருக்கிறார்.
2226 சதுர அடி நிலத்தில் இரண்டடுக்கு வீடு அங்கு இருக்கிறது. பத்திர பதிவு செய்ய மட்டும் 70 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார் நடிகை.